• Aug 08 2025

குத்துப்பாட்டு போரடிச்சிருச்சு.. திடீரென அம்மன் பாட்டுக்கு நடனம் ஆடும் தமன்னா..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவின் குத்து பாட்டு இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என்ற சென்டிமென்ட் திரையுலகில் இருக்கிறது என்பதும் குறிப்பாக ’ஜெயிலர்’ ‘அரண்மனை 4’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றிக்கு தமன்னாவும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு ஹிந்தி படத்தில் கூட அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பது இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடி போரடித்து விட்டதா என்பது தெரியவில்லை தற்போது தமன்னா ஒரு சாமி படத்தில் நடித்து வருவதாகவும் அந்த படத்தில் அவர் ஒரு அம்மன் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாகவும் தெரிகிறது. ’ஒடேலா 2’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள தெலுங்கு படத்தில் தான் அம்மன் கேரக்டரில் தமன்னா நடித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படத்தை தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



ஏற்கனவே நடிகர் நயன்தாரா ’மூக்குத்தி அம்மன் 2’ என்ற திரைப்படத்தை அம்மனாக நடிக்க உள்ளார் என்பதும் அதேபோல் ’மாசாணி அம்மன்’ திரைப்படத்தில் த்ரிஷா அம்மனாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீர் என தற்போது தமன்னாவும் அம்மன் பாடலுக்கு நடனம் ஆடுவதை பார்க்கும் போது முன்னணி நடிகைகள் ஒரே நேரத்தில் திடீரென அம்மன் படம் பக்கம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement