• Apr 16 2026

‘வீரம்’ படப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம்… அஜித்தைப் பற்றி தமன்னா பகிர்ந்த இனிய நினைவுகள்

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு இனிய நினைவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குறித்து அவர் கூறிய பாராட்டுச் சொற்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

அதாவது, “அஜித் மிகவும் இனிமையானவர். ‘வீரம்’ படப்பிடிப்பின் போது எனக்காக கேரவனில் இட்லி செய்து கொடுத்தார். அவர் ஒரு Perfect Family Man.” என்றும் தமன்னா கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், எளிமையான குணத்தாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றவர் அஜித். திரையில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்தாலும், நிஜ வாழ்க்கையில் அமைதியான, எளிமையான மனிதராக அவர் குறித்து பலரும் கூறி வந்துள்ளனர். 

இந்த நிலையில், அவருடன் இணைந்து நடித்த நடிகை தமன்னா பகிர்ந்துள்ள இந்த அனுபவம், அஜித்தின் தனிப்பட்ட குணநலன்களை மீண்டும் ரசிகர்களிடம் பேசுபொருளாக்கியுள்ளது.

Advertisement

Advertisement