• May 15 2026

சஸ்பென்ஸ் காலி.. இணையத்தில் லீக்கான 'ஃபௌசி' படப்பிடிப்பு புகைப்படங்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

'ஃபௌசி' திரைப்படம் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இமன்வி நடித்துள்ளார். மேலும் மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.


இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜீ மேற்கொண்டு வருகிறார். இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் பணிபுரிந்து வருகிறார். பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ‘ஃபௌசி’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன. இந்த லீக் சம்பவம் படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் அனுபவிக்க வேண்டிய சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியம் இத்தகைய கசிவுகளால் பாதிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும், ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை இணையத்தில் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், படக்குழு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement