• Apr 17 2026

தமிழ் சொல்லி கொடுத்த சுருதிக்கா! முதன் முறையாக தமிழ் பேசிய இந்தி பிக் பாஸ்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் விட இந்தி பிக் பாஸ் சூப்பரா இருக்குன்னு மொழி தெரியாவிட்டாலும் சுருதிகாவுக்காக இந்தி பிக் பாஸ் பார்ப்போர் பலராகிவிட்டனர். தமிழில் ஒரு சில படங்கள் பண்ணினாலும் பெரிய அளவு பேமஸாகாத இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸாகிவிட்டார். 


இந்நிலையில் இந்த முறை தமிழ் பிக் பாஸ் சீசன் 8க்கு வருவார் என்று நினைத்த நிலையில் ஒரு டுவிஸ்டாக அவர் இந்தி பிக் பாஸ் 18ற்கு சென்று விட்டார். ஆரம்பத்தில் அவர் தமிழ் பெண் என்பதால் அவரை நிராகரித்த மக்கள். தற்போது அவரின் குறும்பு தனமான செயலையும் பேச்சையும் கண்டு மக்கள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக விரும்ப ஆரம்பித்து விட்டனர். 


எப்போதும் துறுதுறுயென என இருக்கும் அவர் அங்கு ஒரு சில போட்டியாளர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்துள்ளார். அவர்கள் பிழையாக சொல்வதை சிரித்துக்கொண்டே சரி செய்கிறார். இப்படி இந்தி பிக் பாஸ் சென்று தமிழ் சொல்லி கொடுக்கும் பெண்ணாக தமிழ் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். 


மேலும் இதுவரை காலமும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிய இந்தி பிக் பாஸ் சுருத்திகாவிடம் உங்கள் கணவர் ட்ரிப் போக இருக்கிறார். அவருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள். தமிழில் சொல்லுங்க என்று சொல்ல சுருதிக்கா தமிழில் சொல்கிறார் அதனை இந்தி பிக் பாஸ் மீண்டும் தமிழில் சொல்கிறார். முதன் முறையாக இந்த பிக் பாஸ் தமிழில் பேசியுள்ளார் என்று ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 

 

Advertisement

Advertisement