• Apr 19 2026

சுந்தர்.சி–விஷால் கூட்டணியில் ‘புருஷன்’ படப்பிடிப்பு திடீர் ரத்து

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா, ஆம்பள, ஆக்‌ஷன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. இதில் மதகஜராஜா படம் உருவாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வந்து வெற்றி கண்டது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர்.சி மற்றும் விஷால் மீண்டும் இணையும் புதிய படம் ‘புருஷன்’ என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் டைட்டில் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ஆக்‌ஷன் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் தமன்னா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ மற்றும் அவரது மகள் அனந்திதா தயாரிக்கின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சுந்தர்.சி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு செல்லவிருந்தனர்.

இந்த நிலையில், சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக படப்பிடிப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை சீரடைந்த பிறகு புதிய படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement