• May 16 2026

டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த சன் டிவி சீரியல்கள்.. மளமளவென சரிந்த விஜய் டிவி சீரியல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் 18வது வாரத்தில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது. அதில் எந்த சீரியல்களுக்கு எந்த இடம் கிடைத்துள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.

அதில், இந்த வாரமும் வழமை போல சிங்கப்பெண்ணே சீரியல் முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் பிடித்துள்ளது.

இந்த வாரம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியல் தற்போது கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்வதால் கடந்த வாரம் நான்காவது இடத்தில் காணப்பட்ட இந்த சீரியல், தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதை தொடர்ந்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது வானத்தைப்போல சீரியல். கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது.


இதை அடுத்து சுந்தரி சீரியல் ஆறாவது இடத்திலும், புதிதாக தொடங்கப்பட்ட மல்லி சீரியல் ஏழாவது இடத்திலும், பாக்கியலட்சுமி சீரியல் எட்டாவது இடத்திலும் காணப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் பெற்றுள்ளதோடு, பத்தாவது இடத்தை ஜீ தமிழ் சீரியலான கார்த்திகை தீபம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement