அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவனித் இயக்கத்தில் சசி குமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "டூரிஸ்ட் ஃபேமிலி" இந்த படம் சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மே முதலாம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் சமீபத்தில் திரையிடப்பட்டுள்ளன அவற்றின் வரவேற்பும் மிகுந்ததாக இருந்தது. இந்த நிலையில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் தமிழ் குமரன் "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தை பார்த்தபின் அதன் முதல் விமர்சனத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் ""டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது; மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "டூரிஸ்ட் ஃபேமிலி" மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்! கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது."என கூறியுள்ளார்.
Listen News!