• Apr 18 2026

சிறகடிக்க ஆசை சீரியலில் வெளியான ஸ்பெஷல் செய்தி! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.

சிறகடிக்க ஆசை என்ற சீரியலில், ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் சந்தோசம்,  பிரச்சனைகள், மற்றும் மாமியார் மருமகள் சண்டை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய கதைக்களமாக கொண்டு நகர்வது தான் இந்த சீரியல்.

அதிலும் முக்கியமாக முத்து மற்றும் மீனா என்ற இரு கதாபாத்திரங்களை வைத்து, அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வாழ்க்கையில் முன்னேற எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.


அதைப்போலவே தற்போதைய கதையில் மனோஜ் சில காலம் வேலையில்லாமல்  பார்க்கில் படுத்து உறங்கியது, முத்துவுக்கு தெரிய வர, முத்து வீட்டார் அனைவருக்கும் சொல்லி வீடியோ போட்டு காட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து கோவத்தில் ரோகிணி காணாமல் போக, மனோஜ் ரோகினியை தேடி அலைந்து இறுதியில், வீட்டுக்கு வந்த ரோகினி, மனோஜை முத்து அசிங்கப்படுத்தும் போது, இனி இப்படி நடந்தா நாங்க இந்த வீட்டிலேயே இருக்க மாட்டோம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

எனவே, மனோஜ், ரோகினி வீட்டை விட்டுப் போவார்களா? அல்லது இதைக் காரணமாக வைத்து முத்துவையும் மீனாவையும் விஜயா வீட்டை விட்டு அனுப்புவாராம? ரோகினியின் நாடகம் அனைவருக்கும் தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை தொடர்பில் தற்போது சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, டிஆர்பி யிலும் டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் வரும் ஜனவரி 17 முதல் 4 நாட்களுக்கு 9 மணியில் இருந்து 10 மணி வரை என 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Advertisement

Advertisement