• Apr 17 2026

விஜயுடன் மீண்டும் போட்டிபோடத் தயாரான சிவகார்த்திகேயன்.! பிரபலம் சொன்ன தகவல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

எச். வினோத் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சர் பிரச்சினைகளால் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொங்கல் தினத்துக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன், விஜயுடன் நேரடியாக போட்டி போட்டு இப்படத்தை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நாளில் பல காரணங்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் டீமில் உள்ளவர்கள் தெரிவித்த தகவலின் படி, சிவகார்த்திகேயன் மீண்டும் விஜயுடன் போட்டி போட தயாராக இருக்கிறார் என கூறப்படுகிறது.


‘ஜனநாயகன்’ திரைப்படம் எதிர்வரும் 19 அல்லது 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிய ‘தாய் கிழவி’ படத்தை வெளியிடுவதற்கும் குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பு ‘ஜனநாயகன்’ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடித்த ‘தாய்க்கிழவி’ படமும் வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலும் பாடியுள்ளார்.

Advertisement

Advertisement