• Aug 08 2025

பக்கா கிரிக்கெட் ப்ளேயரான சிவகார்த்திகேயன்! தீயாய் பரவும் காணொளி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் தான் அடுத்த தளபதி என்ற பேச்சுக்களும் பரபரப்பாக அடிபடுகின்றன.

தற்போது ஆக்சன் படங்களில் அதிக கவனம்  செலுத்திவரும் சிவகார்த்திகேயன் இன்றைக்கு ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இவரது நடிப்பில் எதிர்வரும் தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் ஆக்சன் படம் ஒன்றில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இந்த கதையை நடிகர் விஜய்க்காகத்தான் முருகதாஸ் உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் இளம் பச்சை நிற டிராக் பேண்ட் அணிந்து கொண்டும், தொப்பி மற்றும் ஷூவுடன் பக்கா கிரிக்கெட் ப்ளேயரைப் போல் விளையாடுகின்றார்.

அத்துடன் ஒரு பந்தை அசால்டாக சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் பலரும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement