• May 18 2025

இப்படி காதுல பூ சுத்துறீங்களே.. ஒரே நாளில் எப்படி 30 லட்சம் அனுப்ப முடியும்? ‘சிறகடிக்க ஆசை’ இயக்குனரை கலாய்க்கும் ரசிகர்கள்..

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு 30 லட்சம் ஜீவா அனுப்பிய காட்சி இருந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்போம். அந்த பணத்தை மனோஜ் மற்றும் ரோகிணி என்ன செய்யப் போகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னொரு பக்கம் ஒரே நாளில் ஒரே பணப்பரிமாற்றத்தில் 30 லட்ச ரூபாய் அனுப்ப முடியுமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்

கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே அனுப்ப முடியும் என்று ஒரு நிபந்தனையை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை தான் அனுப்ப முடியும் என்றும் அதிலும் புதிதாக ஒரு நபருக்கு அனுப்ப வேண்டும் என்றால் அவருக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் வங்கி விதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் புதிதான ஒருவரை நமது benficiary ஆக சேர்த்தால் உடனே பணம் அனுப்ப முடியாது. குறைந்தது ஒரு மணி முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் ஜீவா, உடனே மனோஜ் அக்கவுண்டிற்கு பணம் அனுப்புவது தான் சந்தேகமாக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஜீவா, மனோஜின் அக்கவுண்ட்டிற்கு முதல்முதலாக பணம் அனுப்பும் நிலையில் அவர் எப்படி 30 லட்சம் அனுப்புகிறார்? இப்படி காதல் பூ சுத்துகிறீர்களே? என்று ரசிகர்கள் ’சிறகடிக்க ஆசை’ இயக்குனருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். சீரியலாக இருந்தாலும் அதிலும் ஒரு லாஜிக் வேண்டாமா? எந்த வங்கியில் ஒரே நாளில் 30 லட்ச ரூபாய் அனுப்ப அனுமதிக்கிறார்கள்? என்ற கேள்வியை அடுத்தடுத்து பலர் கேட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 ஐசிஐசிஐ உள்ளிட்ட ஒரு சில வங்கிகளில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வரை அனுப்பலாம் என்றும் ஆனால் புதிய அக்கவுண்டிற்கு அனுப்ப முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் சிலர்  கூறி வருகின்றனர். ஒருவருடைய அக்கவுண்டுக்கு முதன்முதலாக பணம் அனுப்பும்போது 30 லட்சம் அனுப்புவது என்பது சாத்தியமில்லை என்று தான் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement