• Aug 09 2025

ஹை லெவல் சொகுசு கார் வாங்கிய சிவாங்கி.! விலை மட்டும் இத்தனை கோடியா.? வைரல் வீடியோ

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி மிகவும் பிரபலம் ஆனவர்தான் பாடகி சிவாங்கி. இவருடைய குரல் வலம் மற்றும் கலகலப்பான பேச்சு, நடவடிக்கைகளை பார்த்து இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இவர் பாடும் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உருவானதோடு அதன் முதல் மூன்று சீசன்களிலும் கோமாளியாகவும், நான்காவது சீசனில் குக்காகவும் களம் இறங்கி இருந்தார். சிவாங்கியைப் போலவே அவருடைய அம்மாவும் பிரபல பாடகியாக காணப்படுகின்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரிலும் சிவாங்கி நடித்திருந்தார். மேலும் விதம் விதமான ஆடைகளை உடுத்தி மாடல் ஆகவும் வலம் வருகின்றார்.


இந்நிலையில் பாடகி சிவாங்கி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் வாங்கிய புதிய காரின் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்  என கூறப்படுகின்றது.

இதுவரையில் விஜய் டிவியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பற்றிய சிவாங்கி அதிலிருந்து வெளியேறி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள  டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் பங்கு பற்ற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement