பிரபல நடிகைகள் சிம்ரன் ,ஜோதிகா ,லைலா ,சினேகா போன்ற 90 களில் கனவுக்கன்னிகளாக இருந்தவர்கள் தற்போது வரை மிகவும் பிஸியாக நடித்து வருகின்றனர். திருமணத்தின் பின்னர் ஒரு சிறிய ஓய்வினை எடுத்திருந்தாலும் இவர்கள் அனைவரும் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகிய டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடிகை சிம்ரன் சசிகுமாரிற்கு ஜோடியாக மிகவும் சூப்பராக நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் தியேட்டரில் வெற்றி நடை போட்டு வருகின்றது. மேலும் சிம்ரன் பல ஊடகங்களிற்கு நேர்காணல்களை வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தைய பேட்டி ஒன்றில் சிம்ரன் " நான் சந்த்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன் இந்த படத்தில் ஜோதிகாவின் கங்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை தான் கேட்டார்கள் ஆனால் அன்று நான் இருந்த சூழ்நிலையில் என்னால் செய்ய முடியவில்லை அதனால் பேட்ட படத்தில் நடிப்பதற்கு உடனே ஒத்து கொண்டேன் " என கூறியுள்ளார்.
Listen News!