• May 16 2026

ஜிவி பிரகாஷின் 'ஹாப்பி ராஜ்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல   இசை அமைப்பாளராக திகழும் ஜிவி பிரகாஷ்  நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக பிளாக் மெயில் படம்  வெளியாகி இருந்தது. அந்த படத்தை மு.மாறன் இயக்க, அதில் கதாநாயகியாக தேஜி அஸ்வினி நடித்திருந்தார். 

இதை தொடர்ந்து ஜீவி பிரகாஷ் ஹாப்பி ராஜ் என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார்.  


ஹாப்பி ராஜ் என்ற படம் காதல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி உள்ளது. அதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.  மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையத்துள்ளார்.

இந்த நிலையில், ஹாப்பிராஜ் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக கௌரி பிரியா நடித்துள்ளார். தற்போது அவர் படக்குழுவினருடன் எடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது. 


Advertisement

Advertisement