• Apr 17 2026

குடிச்சிட்டு அடித்த முத்து.. வீட்டை விட்டு வெளியேறும் மீனா? ஆனந்த தாண்டவத்தில் விஜயா! அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

முத்துவுக்கு மீனாவுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையை வைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார் விஜயா.

அத்துடன் பார்வதிக்கு போன் பண்ணி, நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டு, முத்து குடிகாரன் அவன் வந்ததும் அவள தூக்கி போட்டு மிதிக்க போறான். அவளே அறுத்துகிட்டு ஓட போற இது நடக்குதா இல்லையா என்று மட்டும் நீ பாரு... என பார்வதிக்கு சொல்லுகிறார்.


அதற்கு பார்வதி, அப்ப நீ சந்தோஷமா இருக்கா என சொல்ல, ஆமா  ரொம்ப சந்தோஷமா இருக்கேன், அத சொல்ல தான் உனக்கு போன் பண்ணினான் என்று சொல்லி போனை வைக்கிறார்.

இவ்வாறு போனை வைத்துவிட்டு சந்தோஷமாக திரும்ப, அவர் எதிரில் யாரோ நிற்க, அவரை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார்.

அதன்படி அவர் எதிலே நிற்பது அண்ணாமலையோ அல்லது மீனாவோ அல்லது முத்துவோ யாரென்று தெரியவில்லை.

ஆனால் விஜயா பேசியது எல்லாம் கேட்டு விட்டு நின்றது போல் தெரிகிறது. அவரைப் பார்த்து விஜயா திகைத்து நிற்கிறார். இதுதான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement