• Apr 16 2026

விவாகரத்து லிஸ்டில் இணைந்த செல்வராகவன்.! கீதாஞ்சலி செய்த செயல் வைரல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன்.  இவர் நடிகராகவும் நடித்து வருகின்றார்.  காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7 ஜி ரெயின்போ காலனி போன்ற  ஹிட் படங்களை  இயக்கி கொடுத்திருந்தார். 

இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.  எனினும் இந்த திருமணம் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.  அதற்கு பின்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

சோனியாவை விவாகரத்து செய்து பிரிந்த அடுத்த வருடம், கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.  அவரும் ஒரு இயக்குனர் தான்.  இவர் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார். 


இந்த நிலையில், செல்வராகவன் - கீதாஞ்சலி  ஜோடிக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகின்றன.  தற்போது இவர்களைப் பற்றிய விவாகரத்து சர்ச்சை தமிழ் திரை உலகில்  தீயாய் பரவி வருகின்றது. அதற்கு காரணம் கீதாஞ்சலியின் செயல்தான் எனக் கூறப்படுகிறது. 

அதாவது, கீதாஞ்சலி தனது இன்ஸ்டாவில் உள்ள செல்வராகவனின் புகைப்படங்கள் அத்தனையும் நீக்கி உள்ளார்.  இதனால் தான் அவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.  எனினும் இந்த தகவல் தொடர்பில்  உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement