• Oct 06 2025

மயிலை வெளுத்து வாங்கிய சரவணன்..! கடைக்கு வேலைக்கு செல்லும் மயில்.. டுடே Promo.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சரவணன் மயிலைப் பார்த்து உங்க அப்பாவ கடைக்கு வரவேணாம் என்று தானே சொன்னேன் அப்புறம் எதுக்கு வந்தாரு... என்னவோ கடைக்கே முதலாளி மாதிரி கல்லால போய் உட்காருறாரு என்று சொல்லி பேசிக்கொண்டிருக்கிறார். 


மேலும் உட்கார்ந்தவர் சும்மா இருந்தாரோ இல்ல கடை பணத்தை திருடினாரோ தெரியல என்று கோபமாக சொல்லுறார் சரவணன். அதைக் கேட்ட மயில் தேவையில்லாம எங்க அப்பாவ பற்றி தப்பா பேசிக் கொண்டிருக்கீங்க என்கிறார். அதோட எங்க அப்பாவுக்கு திருடுற பழக்கம் எல்லாம் கிடையாது என்று சொல்லுறார். அதுமட்டுமல்லாமல் ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் உங்கட அப்பா கொண்டு போய்ட்டார்... வெட்கமா இல்லையா என்று சரவணன் கேட்கிறார். 


அதுக்கு மயில் இனிமேல் அந்த கடையில இருந்து எங்க அப்பா தண்ணி கூட எடுத்து குடிக்கமாட்டார் என்று சொல்லுறார். மேலும், தான் இனிமேல் கடையில தான் வேலை செய்யப்போறேன் என்று சொல்லிட்டு கடைக்குப் போய் நிற்கிறார். அப்ப மயிலோட அப்பா நம்ம கடைதானே போய் கல்லால இரு என்கிறார். அதைப் பார்த்த சரவணன் கோபப்படுறார். 

Advertisement

Advertisement