• Jun 14 2026

மூன்றாவது வாரத்திலும் அதே வேகம்… புதிய மைல்கல்லை எட்டிய சூர்யாவின் 'கருப்பு'

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள பேண்டஸி ஆக்ஷன் திரைப்படமான ‘கருப்பு’ படம் திரையரங்குகளில் தொடர்ந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் மூன்றாவது வாரத்திலும் வசூலில் தனது வேகத்தை இழக்காமல் நிலைத்திருப்பது பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் வசூலில் தொடர்ச்சியாக சாதனை படைத்து வரும் நிலையில் தற்போது உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, இப் படம் வெளியான 17வது நாளில் இந்தியாவில் மட்டும் 5.90 கோடி வசூலித்துள்ளது. இது முந்தைய நாளை விட 14.6% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுவரை இந்தியாவில் மொத்தம் 182.45 கோடியும், உலகளவில் 289.24 கோடியும் வசூலாகியுள்ளது. 


வெளிநாட்டு சந்தைகளிலும் படம் நிலையான வரவேற்பை பெற்று 78.25 கோடி வசூலை எட்டியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இதேவேளை, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியாகத் தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement