• Apr 26 2026

சென்னை வெயிலை விட்டு தாய்லாந்துக்கு பறந்த சச்சனா..! வைரலான வீடியோ!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இளம் நடிகை சச்சனா நமிதாஸ், தற்போது சினிமா உலகில் வேகமாக வளர்ந்து வரும் முகங்களில் ஒருவராக திகழ்கிறார்.

சமீபத்தில் கென் கருணாஸ் இயக்கிய யூத் படத்தில் நடித்து கவனம் பெற்ற சச்சனா, படப்பணிகள் முடிந்த நிலையில் தாய்லாந்தில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்கு கடற்கரையில் ஜாலியாக ஆடியதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மகாராஜா படத்தில்  பள்ளி மாணவியாக நடித்ததால் பலரும் சிறுமி என்று நினைத்திருந்த சச்சனாவுக்கு உண்மையில் 21 வயது என்று பிக் பாஸில் தெரியவந்தது. தாயின் ஆசைக்காகவே போராடுவதாகவும் அதற்காகவே பிக் பாஸில் பங்கேற்றதாகவும் உணர்வுபூர்வமாக கூறினார்.


பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே வெளியேறிய சச்சனா, மீண்டும் வந்து 60 நாட்கள் தங்கி சுமார் ரூ.12 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது வெளியிட்டுள்ள கடற்கரை வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தனது இயல்பான மகிழ்ச்சியை பகிர்ந்த இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement