தமிழ் திரையுலகில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாகக் கருதப்படும் ஒரு பெரும் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த மெகா பட்ஜெட் படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் இயக்குவது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பெரும் படைப்பை Red Giant Movies நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் ரஜினி மற்றும் கமல் இணையும் தருணம் ரசிகர்களுக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
படத்திற்கு தற்காலிகமாக KHxRK என பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இளைய தலைமுறையின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான அனிருத், ரஜினி – கமல் இணைப்பில் இசை அமைப்பது கூடுதல் ஹைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, இயக்குநரும் நடிகருமான S. J. சூர்யா தனது X தளத்தில் உற்சாகமான பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதாவது, “ஆஹா..!! என்ன ஒரு தருணம்.. ரெண்டு வெற்றியாளர்களும் ஒன்னா நடந்து வர்றது... கண் கொள்ளாக் காட்சி. என்ன ஒரு பிரசன்டேஷன் சார்...” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அந்த பதிவை பகிர்ந்து வருகிறார்கள்.
Wow🔥🔥what an iconic moment 🥰🥰🥰Rendu tycoons-um onna nadandhu varradhu🔥🔥kan kozha kaatchi 🥰🥰🥰🥰🥰 Dir @Nelsondilpkumar what a presentation sir 🥰🥰@anirudhofficial and you always Rocks 🥰🥰🥰🥰@RedGiantMovies_ created a proud moment 🔥🔥🔥🔥🙏sjs https://t.co/wzyT0cnMjH
Listen News!