• Apr 27 2025

விஜய் டிவி சீரியலில் நடிக்க ரயானுக்கு விருப்பம் இல்லையா? அவரே கொடுத்த விளக்கம்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அதிகளவான ரசிகர்களை கொள்ளை கொண்ட நிகழ்ச்சியே பிக் பாஸ். இந்நிகழ்ச்சியானது பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

எனினும் இந்நிகழ்வானது தற்போது நிறைவடைந்து காணப்படுகின்ற நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் தற்போது பேட்டி கொடுத்து வருகின்றனர். 

அந்தவகையில் தற்போது ரயான் ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டி வெளியாகி உள்ளது.


அதில் ரயான், " தான் பிக்பாஸிற்கு வருவதற்கு முன்னர் அதே சானலில் ஒளிபரப்பாகி வந்த பனி விழும் மலர்வனம் என்ற நாடகம் ஒன்றில் நடித்து வந்தேன். அந்த சந்தர்ப்பத்தில்  தான் பிக்பாஸிற்குள் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

அத்துடன் நாடகத்தில் நடிப்பதை விட பிக்பாஸிற்குள் செல்லவே எனக்கு விருப்பம். அதனால் தான் நாடகத்தில் இருந்து விலகியதாகவும் கூறினார். முதலில் மக்கள் மத்தியில் தன்னை பிரபலம் அடைய வைத்தது சீரியல் தான்" எனவும் ரயான் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement