• Apr 17 2026

பிள்ளையுடன் வசமாக சிக்கிய ரோகிணி.. மீனா கொடுத்த அதிரடி ஷாக்! அம்பலமாகும் நிலையில் ரோகிணியின் பித்தலாட்டம்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க  ஆசை. குறித்து சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வழியாக உள்ளது.

அதன்படி குறித்த ப்ரோமோவில், காணாமல் போன ரோகினியை தேடிக் கொண்டு முத்து, மீனா, மனோஜ் ஆகிய மூவரும் காரில் சென்று கொண்டுள்ளனர்.

இதன் போது உன்னால தான் எல்லாமே இப்படி ஆச்சு என முத்துவோட மனோஜ் சண்டை பிடித்துக் கொண்டு வருகிறார்.


இதற்கு கோபப்பட்ட முத்து, அப்படின்னா உன்ட பொண்டாட்டி  நீயே ரோட்டு ரோட்டா இறங்கி கூப்பிடு என்று சொல்ல, காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி போகிறார் மனோஜ்.

அந்த நேரத்தில் சிறுவர் ஒருவன் பந்து எறிய அது காரின் மேலாக வந்து விழுகிறது. அதனை பார்த்த மீனாவை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான் சிறுவன்.


அந்த வீட்டில் தான் ரோகிணி மறைந்திருக்கிறார். மீனா அங்கு வருவதை  பார்த்ததும் வாசலில் இருந்த செருப்பை எடுத்துக்கொண்டு, நான் இங்கு இருப்பது தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டு பின்பக்கமாக செல்கிறார். 


இதன்போது குறித்த சிறுவன், பாட்டி அத்தை எங்க காணோம் என சொல்ல, யாரு உங்க பொண்ணா என மீனா அந்த பாட்டியிடம் கேட்கிறார்.


இவ்வாறு ரோகினி குறித்த வீட்டில்ஒழிந்திருக்க முத்து, மீனா, மனோஜ் ஆகியோர் அங்கு உள்ளனர். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ...

Advertisement

Advertisement