• Apr 16 2026

தமிழ்த் திரையுலகில் புதிய அவதாரம் எடுத்த ரியோ ராஜ்.. அறிவிப்புடன் வெளியான அதகள வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ரியோ ராஜ். அதற்குப் பின்பு வெள்ளித்திரையிலும் கால் பதித்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து, தனக்கு நட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இவருடைய நடிப்பில் வெளியான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்கள் உட்பட, இவருடைய நடிப்பில் வெளியான காதல் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

கடந்த ஆண்டு வெளியான ஆண்பாவம் பொல்லாதது என்ற படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ரியோ ராஜ்.


இந்த நிலையில், நடிகர் ராஜ் புதிதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 'ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்' என பெயர் சூட்டியுள்ளார். மேலும், தனது தயாரிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்போடு தயாரிப்பாளராக இருப்பதாகவும் ஒரே நேரத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது ரியோ ராஜுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரியோ ராஜ் புதிய ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில், நடிகர் ரியோவுடன் ஜோ திரைப்படத்தின் தொகுப்பாளர் வருண் கேஜி மற்றும் பிரபல யூட்யூபர் நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான அப்டேட்கள் இனிவரும் காலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement