• Apr 16 2026

ராயன் படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்..?? முதல் நாளே கணிக்கப்பட்ட வசூல் விபரம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். இந்த படம் இன்றைய தினம் உலக அளவில் வெளியாகியுள்ளது. இதற்கு தற்போது வரையில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகின்றது.

தனுஷின் ராயன் படத்தின் ஃப்ரி சேல் டிக்கெட் புக்கிங் தாறுமாறாக உள்ளதாம். இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அரண்மனை 4, மகாராஜா உள்ளிட்ட படங்கள் எல்லாமே முதல் நாளிலேயே வெறும் 4 கோடி ரூபாய் தான் வசூல் ஈட்டின.

இந்த நிலையில், ராயன் படத்தின் ஃப்ரி சேல் டிக்கெட் மாத்திரமே தமிழ்நாட்டில் ஐந்து கோடிக்கு விற்பனையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதேபோல உலக அளவில் ஆறு கோடிக்கும் ஃப்ரி சேல் டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாம்.


தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் முதல் நாளில் 10 கோடிக்கு வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. தற்போது ராயன் திரைப்படமும் முதல் நாளில் 10 கோடிக்கு மேலான வசூலை செய்து கர்ணன் சாதனையை முறையடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement