• Apr 17 2026

தேசிய விருது தேவையில்லை - உதறித் தள்ளிய ராஷ்மிகா.! காரணம் என்ன தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய படங்களில் மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான அனிமல், புஷ்பா 2, சாவா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான "தி கேர்ள் பிரண்ட்" என்ற படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த படத்தில் இவருடைய நடிப்பை பற்றி பேசிய  இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், சமீப நாட்களில் நான் மனம் திறந்து கைதட்டி ரசித்த படம் "தி கேர்ள் பிரண்ட்" என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், என்னைப் பொருத்தவரை, ராஷ்மிகா நேஷனல் கிரஷ் மட்டுமல்ல, அவர் நேஷனல் விருதுக்கும் தகுதியானவர். அந்த படத்தில் ஒரு அப்பாவித்தனமான முகத்தை காட்டி நடித்துள்ளார். அவர் அந்த கதாபாத்திரத்தோடு வாழ்ந்துள்ளார். இந்த படத்தை எல்லோரும் நிச்சயம் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், "தி கேர்ள் பிரண்ட்" படம் நல்ல வரவேற்பை பெறுவதால், ராஷ்மிகாவுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர், இசையமைப்பாளர் உட்பட பலரும் பேசி வருகிறார்கள். 

எனினும், இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா, "எனக்கு தேசிய விருது தேவையில்லை" என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் படத்தை உணர்ந்து ரசிப்பதே பெரிய வெற்றி என்று கூறினார். 

நீங்கள் புரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. அந்தப் படத்துடன் ஒன்றித்து விட்டீர்கள், அதுவே எனக்கு மிகப்பெரிய விருதுதான். தேசிய விருதுகள் உட்பட எந்த விருதுமே எனக்கு தெரியாது. இனிமேல் அவை தேவையில்லை. உங்களுக்கு படம் பிடித்தால் போதும். இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

Advertisement

Advertisement