• May 16 2026

சர்ச்சைகளுக்கு நடுவில் ரங்கராஜ் வெளியிட்ட புதிய போட்டோஸ்… வைரலாகும் பதிவு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமையல் துறையைத் தாண்டி மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதன்பின் தனது சொந்த உணவக தொழிலில் முழு கவனம் செலுத்திய அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து ரசிகர்களிடம் பிரபலமாகி வந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜாய் கிரிசில்டா வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தன்னுக்கும் ரங்கராஜுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், கர்ப்பமாக இருந்தபோது அவர் விலகியதாகவும் ஜாய் குற்றம்சாட்டினார். 

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனையில் குழந்தை ரங்கராஜின் மகன் என்பதும் உறுதியானது. அதன் பின்னர் அவர் குழந்தையை ஏற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதியும், எந்த சூழ்நிலையிலும் தனது குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என பதிலடி அளித்திருந்தார்.


இத்தகைய சர்ச்சைகள் இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புதிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

அதில் அவர் மிகவும் அமைதியான முகத்துடன் இளநீர் குடித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “ஒவ்வொரு இடமும் உன்னுள் ஏதோ ஒன்றை விடுகிறது – ஒரு நிறம், ஒரு மணம், இன்னும் அமைதியான ஒரு உன் வடிவம்… அதை உன்னுடன் எடுத்துச் செல்லுங்கள்.”  என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு, சர்ச்சைகளுக்கு நடுவிலும் அவர் அமைதியாக இருப்பதை காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement