• Jul 18 2025

உலகநாயகனின் படத்தை ஆறப்போட்டு பார்க்கும் ரஜினி? ஏன் இந்த முடிவு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தற்போது வரையில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தனக்கு நிகர் தானே என்று 70 வயதை கடந்தும் இன்றும்  ஹீரோவாக நடித்து வருகின்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் மற்றும் கூலி திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படம் மீது எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகமாவே காணப்படுகின்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது. அதை தொடர்ந்து அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். எனினும் அந்த படம் தோல்வியை தழுவியது.


தற்போது ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்திற்கு தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்ட ரஜினி, அங்கு குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் வைரலாகி  இருந்தன.

இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் முடிந்த பிறகு நாளை 16 ஆம் தேதி கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தை பார்க்க உள்ளேன் என பேட்டி வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.

அதாவது கடந்த 12ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படத்தை நாளை பார்க்க உள்ளதாக ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். இந்த படம் பற்றி தற்போது கலவையான விமர்சனங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினிகாந்த் இந்த படம் பற்றி என்ன சொல்லுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement