• Apr 17 2026

நகுல் தேவயானியை திருமணம் செய்ததை தேச துரோகம் போல பார்த்தார்... ராஜகுமாரன் வெளிப்படை.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டது அன்றைய காலகட்டத்தில் பலரிடமும் பேசுபொருளாக மாறியது. இந்த திருமணம் தொடர்பாக, நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் கொண்டிருந்த மனநிலை குறித்து தற்போது ராஜகுமாரன் வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது திரையுலகிலும் சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றுள்ளன.


சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜகுமாரன், “நான் தேவயானியை கல்யாணம் செய்ததை, இன்று வரை ஒரு தேச துரோகம் போல நினைத்துக் கொண்டிருக்கிறார் நகுல். நடிக்க வந்த ஒரு பெண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டேன் என்பது தான் அவருக்கு கோபம்.”என்று கூறியுள்ளார். இந்த கருத்து பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜகுமாரன் தனது பேட்டியில் தொடர்ந்து பேசுகையில்," ஒரு மிகப்பெரிய இயக்குநரை திருமணம் செய்து கொண்டது நடிகை தேவயானிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்பது அவருக்குப் புரியவில்லை." என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தேவயானியின் வாழ்க்கையிலும், தொழிலிலும் தாம் தடையாக இருந்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement