• Aug 28 2025

ராகவா லாரன்ஸ் மீண்டும் அசத்தல்: புதிய படம் ‘புல்லட்’ டீசர் வெளியீடு..!

luxshi / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புல்லட்’ சினிமா ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்புடன் காத்திருக்கப்படுகிறது.


இப்படத்தை இயக்குநர் இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார்.

இவர் முன்னதாக அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தை இயக்கியவர்.

 ‘புல்லட்’ படத்தின் இசையை சாம் சி எஸ் செய்துள்ளார். தயாரிப்பை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.


இதில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக வைஷாலி ராஜ் இணைந்து நடித்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழுவால் தற்போது டீசர் வெளியிடப்பட்டது.

டீசரில், ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் வேறொருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு இடையேயான அந்த தொடர்பு என்ன என்பது திரையரங்குகளில் படம் வெளிவந்ததும் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement