• Apr 15 2026

ராதிகாவின் மிரட்டலான கம்பேக்.! – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘தாய் கிழவி’

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதையம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “தாய் கிழவி” திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளிலேயே கவனிக்கத்தக்க வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ராதிகாவுடன் இணைந்து இளவரசு, தம்பி இராமையா, அருள்தாஸ், பாலசரவணன், முனீஸ்காந்த், முத்துக்குமார் மற்றும் ரேச்சல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்பட வசூல் தொடர்பான தகவல்களை வெளியிடும் Sacnilk இணையதளத்தின் தரவுகளின்படி, “தாய் கிழவி” திரைப்படம் முதல் நாளில் ரூ. 2 கோடியே 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்பத் திரைப்படமாக வெளியான இந்த படத்திற்கு இது நல்ல ஆரம்பமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வசூல் மேலும் உயரும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Advertisement

Advertisement