தமிழ் தொலைக்காட்சி உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் நடிகை ரச்சிதா. விஜய் டீவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' போன்ற தொடர்களின் மூலம் தமிழ்க் குடும்பங்களின் மனங்களில் ஏராளமான ரசிகர்களை குவித்திருப்பதோடு, சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த புகைப்படங்களில் ரச்சிதா, ஒரே உடையில் பல்வேறு angle-களில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உடை, அலங்காரம், பளிச்சென தோன்றும் மேக்-அப் என்பன மூலம் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இது ரச்சிதாவா? தெரியவே இல்லையே!” என ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர். ஏற்கனவே சீரியல்களில் பாரம்பரிய உடைகளில் காணப்பட்ட ரச்சிதா, இம்முறை ஸ்டைலான போட்டோஷூட்டால் கலக்கியுள்ளார்.
Listen News!