• May 15 2026

நயன்தாரா கெட்டப்பில் அசத்துறாங்களே.! ரச்சிதாவின் புதிய லுக் வீடியோ வைரல்

shali / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் ரச்சிதா மகாலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

இவர் சீரியலில் ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


தற்போது தனது அம்மாவுடன் வாழ்ந்து வரும் ரச்சிதா, பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவர், சமூக வலைதளங்களிலும் அதிகமாக செயல்பட்டு வருகிறார்.

அண்மைக் காலமாக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ரச்சிதா, தற்போது புதிய லுக்கில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவால் பேசுபொருளாகியுள்ளார்.

நடிகை நயன்தாரா பாணியில் பியரிங் செய்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது. இந்த புதிய லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement