• Apr 15 2026

மேக்கப் இல்லாத இயற்கை அழகு… காலையில் விதவிதமாக போஸ் கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் முக்கியமானவராக இருந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. குறிப்பாக, சரவணன்–மீனாட்சி என்ற பிரபல தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.


ரச்சிதா மகாலட்சுமிக்கு சரவணன்–மீனாட்சி தொடர் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த தொடரில் அவர் நடித்த மீனாட்சி கதாபாத்திரம், இளம் ரசிகர்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து, பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரச்சிதா, சின்னத்திரையில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தினார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு, ரச்சிதா மகாலட்சுமி திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது கவனத்தை திருப்பினார். வெள்ளித்திரையில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தேர்ந்தெடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம், சின்னத்திரை நடிகை என்ற அடையாளத்திலிருந்து வெளியே வந்து, பல்துறை நடிகையாக மாற முயற்சி செய்து வருகிறார்.


நடிப்பு மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ரச்சிதா மகாலட்சுமி மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற தளங்களில் தனது தினசரி வாழ்க்கை தருணங்கள், ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட எண்ணங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ரச்சிதா மகாலட்சுமி பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில், காலை நேரத்தில் சூரிய ஒளி யன்னல் வழியாக அவரது முகத்தில் விழுவது போல அவர் போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement