• May 22 2025

புஷ்பா படம் எனக்கு ஹெல்ப் பண்ணல.. எல்லாம் அவருக்காக தான்! உண்மையை உடைத்த பகத் பாசில்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளம் மற்றும் தமிழில் பேமஸான இயக்குனர் தான் பாசில். அவருடைய மகன் பகத் பாசில் தற்போது இந்திய அளவில் பேமஸான இயக்குனராக காணப்படுகிறார்.

தற்போது கண்களால் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்து வரும் நிலையில், அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் பகத் பாசில்.

அவரது அலட்டல் இல்லாத நடிப்பும் அவரது டயலாக், பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

வேலைக்காரன் படத்தில் வில்லனாக மிரட்டிய பகத் பாசில், அதைத் தொடர்ந்து விக்ரம், மாமன்னர் படத்திலும் நடித்திருந்தார்.


இதற்கு இடையே புஷ்பா படத்திலும் நடித்து இருந்தார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக உருவாகியிருக்கும் புஷ்பா 2 படத்திலும்  நடித்திருக்கின்றார். இதிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.


இந்த நிலையில், புஷ்பா படம் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார் பகத் பாசில். அதன்படி அவர் கூறுகையில்,

புஷ்பா படம் என்னை ஃபேன் இந்திய நடிகராக உருமாற  உதவவில்லை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே இயக்குனர் சுகுமார் தான். அவர் மீது இருக்கும் அன்பால் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்தப் படத்துக்கு பிறகு என்னிடமிருந்து ரசிகர்கள் ஒரு மேஜிக்கை எதிர்பார்க்கின்றார்கள். புஷ்பா என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதெல்லாம் இல்லை. இது குறித்து நான் சுகுமாரிடம் பேசி இருக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement