• Apr 16 2026

திரையில் கிளாமர்… வீட்டில் இவ்வளவு சிம்பிளா? இணையத்தை தெறிக்கவிட்ட பிரணிதாவின் போட்டோஸ்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பிரணிதா சுபாஷ். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனது அழகு, எளிமை மற்றும் நடிப்புத் திறனால் அவர் தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.


திரைத்துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் இல்லாத நேரங்களிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர் பிரணிதா. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். 

இந்நிலையில், தற்போது பிரணிதா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சில அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் எளிமையாகவும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறார். குறிப்பாக, குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் அவருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

Advertisement

Advertisement