கலைப்புலி ஜி.சேகரன் இன்று 73வது வயதில் காலமானார். திரையுலகில் ஒரு முக்கிய நபராக இருந்து வந்த இவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் தனது சேவைகளை அளித்தார்.சினிமா விநியோகஸ்தராக தனது கரியரை தொடங்கிய கலைப்புலி ஜி.சேகரன் பின்னர் எஸ்.தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராகவும் இருந்தார். 1985-ம் ஆண்டு வெளியான ‘யார்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் பின்னர் இயக்குநராகவும் வெற்றிபெற்றார்.
1988-ம் ஆண்டு ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ படத்தை இயக்கி திரையுலகில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்தினார்.தொடர்ந்து ‘காவல் பூனைகள்’ மற்றும் ‘உளவாளி’ போன்ற படங்களை இயக்கி பெரும் புகழ் பெற்றார். அவர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் சேவை செய்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த கலைப்புலி ஜி சேகர் இன்று மதியம் உயிரிழந்தார். அன்னாரது பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணி முதல் அவரது இல்லமான ராயபுரத்தில் வைக்கப்பட உள்ளது. அன்னாரின் மறைவு தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த துக்க செய்தியை கேள்விபட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.இன்றைய நிலவரத்தில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள், கலைப்புலி ஜி.சேகரனின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!