• May 17 2025

பிரபல காமெடி நடிகை பிந்து கோஷ் காலமானார்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

80களில் தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகையாக பெயர் பெற்ற பிந்து கோஷ் இன்று காலமானார். தனது குண்டான தோற்றம் மற்றும் வெகுளியான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் பிந்து கோஷ் இவருக்கு தற்போது 76 வயதாகியுள்ள நிலையில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.


சினிமாவில் நன்கு சம்பாதித்தாலும் அவரது கணவர் ஒரு குடிகாரர் என்பதால் இவரது சொத்துக்கள் அனைத்தையும் அழித்து விட்டார். அதன்பின் பிந்து கோஷ் தன்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்ததாக சமீபத்தைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.மேலும் தனது மருந்து செலவுகளுக்காக சக நடிகர்களிடம் உதவி கேட்டும் அவர்கள் செய்யவில்லை என கூறியிருந்தார்.


இவரது நிலைமையை அறிந்த நடிகை ஷகிலா மூலம் kpy பாலா குறித்த தொகை பணத்தினை வழங்கி உதவி செய்திருந்தார். அவரது உடல்நிலை நீண்டநாட்களாக மோசமாகியமையினால் இன்று அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரது துயர சம்பவத்தை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement