• Apr 18 2026

திவ்யாவை ஊர் கிழவினு சொன்ன பார்வதி அம்மா..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில்  வரலாற்றில் முதல் முறையாக 24 மணி நேரம் தங்க அனுமதிக்கப்பட்டவர் பார்வதியின் அம்மா. அவர் தற்போது  பண்ணுகின்ற விஷயங்கள் பிக் பாஸ் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. 

பிக் பாஸ் சீசன் 9 வீட்டிற்கு விருந்தாளிகளுக்கு என்று டைம் ஒதுக்கப்பட்டது. அதில் ஆதிரை தனக்கு கிடைத்த சான்ஸை பார்வதிக்கு விட்டுக் கொடுத்ததால் பார்வதியின் அம்மா  24 மணி நேரம் தங்க அனுமதி அளிக்கப்பட்டது.  பலரும் பார்வதியின் அம்மாவின் வரவை தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்த்த எதையும் பார்வதியின் அம்மா செய்யாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

மேலும் கமருதீனுக்கு பார்வதிக்கும்  அட்வைஸ் பண்ணுவார் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பார்வதிக்கு மேல் அதிகமாக ஹவுஸ்மேட்சை பற்றி புறம் பேசுகின்றார். 


அந்த வகையில்  அரோரா நல்ல பாம்பே கிடையாது. அவ விஷப்பாம்பு  அதுவும் அவருடைய தோழி  ஒரு பெரிய லாடு லபக் தாஸ்  என்று கூறியிருந்தார் பார்வதி. இதற்கு அவருடைய அம்மா கொடுத்த ரியாக்ஷன்  ஹைலைட்டாக காணப்பட்டது. 

மேலும்  திவ்யாவை ஊர் கிழவி என சொல்லி உள்ளார் பார்வதியின் அம்மா.  இது மேலும்  ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.  பார்வதி பிக் பாஸ் வீட்டில் பண்ணும் அட்டூழியங்கள் அவருடைய கண்ணுக்குத் தெரியவில்லை, ஆனால் பிற பெண்களை பற்றி இவ்வாறு பேசுகின்றாரே என விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Advertisement

Advertisement