• Jun 12 2026

கோமதியைப் பார்த்து கதறி அழுத பாண்டியன்.! செய்வதறியாது கலங்கி நிற்கும் குடும்பம்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் டாக்டர் கிட்ட அம்மா இப்ப எப்படி இருக்காங்க என்று கேட்கிறார். அதுக்கு அவர், அவங்களுக்கு Bp கொஞ்சம் Low-வா தான் இருக்கு ஒழுங்கா சாப்பிடுறவங்களா என்று கேட்கிறார். பின் பாண்டியன் கோமதியை பார்க்கலாமா என்று கேட்கிறார். அதுக்கு டாக்டர் அவங்கள இப்போதைக்கு பார்க்க முடியாது என்று சொல்லுறார்.

அதனை அடுத்து மீனா பாண்டியனைப் பார்த்து அத்தைக்கு எதுவும் ஆகாது என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் கோமதி சாப்பிட்டாளா இல்லையா என்று கூட எங்க யாருக்கும் தெரியல என்று சொல்லுறார். மறுபக்கம் காந்திமதி கோமதியை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பழனி அங்க போய் அவங்களுக்கு ஒன்னும் இல்ல என்று சொல்லுறார்.


பின் சுகன்யா அத்தை வீட்டில கிடந்தப்போ பார்த்திட்டு பயந்து போய்ட்டோம் என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் கோமதியை ஒழும்பச் சொல்லிக் கூப்பிடுறார். அதைத் தொடர்ந்து டாக்டர் வந்து அமைதியா இருங்க என்று சொல்லுறார். கதிரும் கோமதியோட நிலைமையை பார்த்திட்டு அழுது கொண்டிருக்கிறார். அதனை அடுத்து வீட்டுக்கு வந்த பாண்டியன் எதுவுமே கதைக்காமல் ரூமுக்குள்ள  போய் அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement