• May 16 2026

சரவணன் - அஞ்சலி சந்திப்பை நேரில் பார்த்த மீனா.! கோமதியை கடுமையாக பேசிய பாண்டியன்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா கோவிலுக்கு போகப்போறேன் என்று சொன்னதைக் கேட்ட செந்தில் மயில் அக்காவோட வாழ்க்கை நல்லா இருக்கோணும் என்று வேண்டுறதுக்காக போறியா என்கிறார். அதுக்கு மீனா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சும்மா தான் போறேன் என்கிறார். அதனை அடுத்து செந்தில் மயிலுக்கு வேலை ஏதாவது வாங்கிக் கொடுத்தால் நான் உன்னோட கதைக்கவே மாட்டேன் என்கிறார்.

மேலும் எல்லா விஷயத்தையும் அப்பா , அம்மா கிட்ட சொல்லிடுவேன் என்கிறார் செந்தில். மறுபக்கம் ராஜி கதிரைப் பார்த்து ட்ராவெல்ஸில நான் இல்லை என்றால் மிஸ் பண்ணுவியா என்று கேட்கிறார். அதுக்கு கதிர் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்கிறார். அதனை அடுத்து கோமதி கையில டீயை ஊத்தினதைப் பார்த்த பாண்டியன் இது வீடா நாடக மேடையா என்றே தெரியல என்கிறார்.


மேலும், இந்த மாதிரி நாடகம் போடுறதை எல்லாம் ஓரளவுக்கு தான் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்கிறார். அதைக் கேட்ட கோமதி அழுது கொண்டிருக்கிறார். அதனை அடுத்து அஞ்சலி கோயிலில சரவணனைப் பார்த்து உன்னோட வாழ்க்கை தன்னும் நல்லா இருக்கும் என்று நினைச்சேன் என்கிறார். அதுக்கு சரவணன் நாம நினைச்சது நடக்க கூடாது என்று கடவுள் நம்ம ரெண்டு பேரோட தலையிலயும் ஒரே மாதிரி எழுதிட்டார் போல என்கிறார். 

அந்த நேரம் பார்த்து கோவிலுக்கு மீனாவும் போகிறார்.அப்ப சரவணன் அஞ்சலியோட கதைச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்த்த மீனா ஷாக் ஆகுறார். பின் எதுவுமே கதைக்காமல் மீனா கோவிலில இருந்து கிளம்பி மயில் வீட்ட போறார். அங்க போன மீனா வயசானவங்களைப் பார்க்கிற வேலை ஒன்னு இருக்கு செய்விங்களா என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement