• Jun 14 2026

நடுரோட்டில் மனைவிக்காக இறங்கி வந்த பாண்டியன்.. - கோமதி போட்ட அதிரடி கண்டிஷன்!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சாப்பிட்டு முடிச்சிட்டு கோமதி மறுபடியும் ரோட்டில நடக்க ஆரம்பிக்கிறார். அதைப் பார்த்த பாண்டியன் இவள் மறுபடியும் தென்பா நடக்க ஆரம்பிச்சிட்டாளே என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் தொட்டதுக்கு எல்லாம் நீ நாடகம் போடுற என்று சொன்னது தப்புத் தான் என்று சொல்லுறார். மேலும், இனிமேல் இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் என்கிறார் பாண்டியன்.

அதுக்கு கோமதி எதுவுமே கதைக்காமல் அமைதியாக போறார். பின் பாண்டியன் நம்ம வீட்டுக்கு போகலாம் வா என்கிறார். ஆனால், கோமதி என்னை நீங்க ஒரு பொருளாவே மதிக்கிறேல நான் ஏன் அங்க வரணும் என்று கேட்கிறார். பின் கோமதி நான் ஒன்னும் கதிரை பாழங்கிணத்தில கொண்டு போய் தள்ளி விடல கல்யாணம் தான் பண்ணி வைச்சேன் என்கிறார்.


அதனை அடுத்து பாண்டியன் தான் கதைச்ச எல்லாத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறார். மேலும், இனிமேல் உன்னைக் கேட்காமல் வீட்டு விஷயத்தில எதுவுமே பண்ணமாட்டன் என்கிறார். மறுபக்கம் அரசி தனக்கு பயமா இருக்கு என்று சொல்ல, மீனா அதுக்கு பயப்பிடாத மாமா அத்தைய Safe-ஆ கூட்டிக் கொண்டு வந்திருவாரு என்று சொல்லுறார்.

அதைத் தொடர்ந்து பாண்டியன் கோமதியைப் பார்த்து ஞாபவம் இருக்கா கல்யாணம் ஆன புதுசில இப்படித் தான் உன்ட அண்ணனுங்களுக்கு பயந்து வெளியில திரிஞ்சோம் என்கிறார். அதைக் கேட்ட கோமதி அண்டைக்குத் தான் நீங்க எந்த நினைப்பும் இல்லாமல் என்கூடவே இருந்தீங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement

Advertisement