• Apr 18 2026

'சின்ன சின்ன கண்கள்' பாடலுக்கு உண்மையான சொந்தக்காரி யாரு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திலிருந்து சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

வசீகரா படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யும் சினேகாவும் மீண்டும் இணைந்து காம்போ பலரையும் கவர்ந்துள்ளது. இதில் சினேகா கியூட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வந்தார்கள்.

சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியானதோடு இதில் பவதாரணி குரலை பாட வைத்து மீண்டும் அவரை ஞாபகப்படுத்தி உள்ளார்கள்.


இந்த நிலையில், தற்போது பவதாரணி குரலில் பாடிய பாடலை விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பிரபலமான பிரியங்கா தான் பாடியதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

இவ்வாறு விஜய் டிவி பிரபலமான பிரியங்கா குறித்த பாடலை பாட, அதனை தொழில்நுட்பத்தின் ஊடாக பவதாரணி குரலுக்கு மாற்றி வெளியிட்டுள்ளார்கள். தற்போது இந்த தகவல் பலராலும் வியக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement