• Apr 17 2026

"பராசக்தி" வெளியீட்டிற்குத் தடை இல்லை! கதை திருட்டு விவகாரத்தில் நீதிமன்றம் எடுத்த முடிவு

shali / 3 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘பராசக்தி’ சமீபத்தில் கதை திருட்டு தொடர்பான வழக்கில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பராசக்தி’ திரைப்படம், ஜனவரி 10-ம் தேதி உலக மக்கள் பார்வைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா, தயாரித்தவர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களின் டான் பிச்சர்ஸ் நிறுவனம். இந்த படம், ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பராசக்தி திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என புகார் அளித்திருந்தார். 


அதாவது, “நான் எழுதிய ‘செம்மொழி’ என்ற கதை, இந்திய மொழி மற்றும் அதன் தடைகளை எதிர்த்து எழுதியது. அதில் மொழிப்போர் மற்றும் சமூக பின்னணியை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டு, அதனை திருடி பராசக்தி படத்தை உருவாக்கியுள்ளனர்.” என்று கூறியிருந்தார். 

இந்த புகார் மூலம் உதவி இயக்குனர் ராஜேந்திரன், செம்மொழி கதைக்கும் பராசக்தி கதைக்கும் ஒற்றுமை இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனு சமீபத்தில் விசாரிக்கப்பட்டு நீதிபதி ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பராசக்தி திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று நீதிமன்றம் முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதாவது, சென்னை உயர் நீதிமன்றம், மனுவை விசாரித்து, பராசக்தி படத்திற்கான தடை விதிக்க வேண்டாம் என தீர்மானித்துள்ளது.

அத்துடன், செம்மொழி படக்கதைக்கும், பராசக்தி படக் கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்ல என பராசக்தி படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது. 2 கதைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

Advertisement