பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, நிதீஷை security office-ல இருந்து வெளியில போகச் சொல்லுறார். இதனை அடுத்து அங்க வேலை செய்யுற ஆட்கள் இனியா கிட்ட வந்து போதைபொருள் கேஸில் அரெஸ்ட் ஆன நிதீஷ் தான் உன்ட புருஷனா என்று கேட்கிறார்கள். மேலும் எப்புடி இப்புடி ஒருத்தன வீட்டில பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க இது கண்டிப்பா லவ் marriage-ஆ தான் இருக்கும் என்று சொல்லுறார்கள். இதைக் கேட்ட இனியா எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கிறார்.
இதனை அடுத்து இனியா வீட்ட வந்து கோபியோட கதைச்சுக் கொண்டிருக்கிறார். பின் கோபி இனியாவைப் பார்த்து நடந்த விஷயம் எல்லாம் office-ல தெரியுமா என்று கேட்கிறார். அதுக்கு இனியா இல்ல டாடி அங்க யாருக்கும் தெரியாது என்று சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரி அங்க யாருக்கும் தெரியாதது நல்லது தான் வேலை செய்யுற இடத்திலயாவது நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்.
பின் இனியா எல்லாருகிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்கிறார். அந்த நேரம் பார்த்து அங்க எழில் வந்து நிற்கிறார். அப்ப எழிலைப் பார்த்தவுடனே அங்க இருந்த எல்லாரும் அழுகுறார்கள். இதனை அடுத்து எழில் இந்த விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லல என்று கோபமாக கேட்கிறார். மேலும் அந்த நிதீஷை சும்மா விடக்கூடாது என்கிறார்.
இதனை தொடர்ந்து இனியா வீட்டில இருந்த எல்லாருக்கும் நிதீஷை divorce பண்ணப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்டவுடனே அங்கிருந்த எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் எழில் இனியா நல்ல முடிவு எடுத்திருக்கிறாள் என்கிறார். இதனை தொடர்ந்து இனியா நிதீஷ் கட்டின தாலியை கழட்டிவைக்கிறார். அதைப் பார்த்த பாக்கியா எதுவும் கதைக்காமல் அழுதுகொண்டிருக்கிறார். மறுநாள் பாக்கியா இனியா என்ன ஆசைப்படுறாளோ அதை நாம பண்ணலாம் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!