• Jun 14 2026

விஜய் டிவி சீரியலுக்கு இவ்வளவு மவுசா? அடுத்தடுத்து ரீமேக் ஆகும் சீரியல்களின் பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.  தற்போது இந்த சீரியலில் தங்கமயில் சரவணனின் திருமண சம்பவ காட்சிகள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்தது. தங்கமயில் வந்ததற்கு பிறகு தான் இந்த சீரியலில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டதென்றே சொல்லலாம்.

பாண்டியன் ஸ்டோர் முதலாவது சீசனில் அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பந்த பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாக வருகிறது.

இந்த நிலையில்,  இந்த சீரியல் தற்போது மலையாளத்திலும் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.


அதன்படி தமிழிலே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என ஒளிபரப்பாகும் இந்த சீரியல்  மலையாளத்தில் Santhwanam 2 என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.

இதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலும் மலையாளத்தில் மட்டும் இன்றி ஐந்து மொழிகளில் ரீமேக் ஆகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement