• Jun 12 2026

குடும்ப குத்துவிளக்காக இருந்த திவ்யாவா இப்படி? லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் திவ்யா கணேஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்ததன் மூலம் குடும்ப ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், பின்னர் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். 


அந்த நிகழ்ச்சியில் தனது அமைதியான அணுகுமுறை, உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் மற்றும் நேர்மையான பேச்சால் ரசிகர்களின் ஆதரவை குவித்த திவ்யா, இறுதியில் டைட்டிலை வென்று மேலும் பிரபலமானார்.

சீரியல் நடிகையாக அறிமுகமான திவ்யா கணேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைத்தளங்களிலும் அதிக கவனம் பெறத் தொடங்கினார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.


இந்த நிலையில், தற்போது திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ள புதிய கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. இதற்கு முன்பு பெரும்பாலும் பாரம்பரிய மற்றும் குடும்ப கதாபாத்திரங்களில் தோன்றிய அவரை, இவ்வளவு ஸ்டைலிஷ் மற்றும் தாராள கிளாமர் தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். 

சிலர் அவரது புதிய லுக்கை பாராட்டி வர, மற்றொருபுறம் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றன. தற்போது திவ்யாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement