தெலுங்கில் முன்னணி நடிகரான நானியின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ஹிட் 3. இப்படம் மே 1 திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வருகின்றது. இந்நிலையில் நானி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதாவது சைலேஷ் கோலானு இயக்கத்தில் நானி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஹிட் 3. இத் திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது, இப்படத்தினை சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் முதல் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது பாகமும் அதனை நிரூபிக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது திரையரங்குகளில் வெளியாகி இன்று வரை 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று வருவதனைப் பார்த்த நானி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் பதிவினை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!