விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தொழில்நுட்பத்தில் நவீன மேம்பாடுகள் பலவற்றிற்கு பயனுள்ளதாக இருந்தாலும் அதேபோல் சிலரின் தனிப்பட்ட உரிமைகளை மீறி தவறாக பயன்படுத்தப்படுவது எவ்வளவு மோசமானது என்பதை இவர் வெளியிட்ட பதிவின் மூலம் எச்சரித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது வீடியோக்கள் மற்றும் குரல்களில் மாற்றம் செய்து அவற்றை தவறாக பயன்படுத்தி வெளியிடுவது அதிகரித்துள்ளதாக ரம்யா குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேடுகளை எதிர்கொண்டு "இது மூன்றாவது தடவையாக நடந்துள்ளது, இது உண்மையில் சட்டத்திற்கு புறம்பானது மற்றும் என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயல்" என அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்தார்.
மேலும் "இந்த செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் சட்ட நடவடிக்கை எதிர்கொள்வீர்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Listen News!