• Apr 17 2026

பாண்டியனை பழிவாங்கும் முத்துவேல்.. மீளமுடியாத சோகத்தில் தவிக்கும் சரவணன்.! டுடே ரிவ்யூ

shali / 3 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோவிலுக்கு போன பாண்டியன் கிட்ட அங்க வந்த பொம்பிள ஒராள் உங்க மருமகள் வீட்டை விட்டு வெளியே போய்ட்டாளாம் உண்மையா என்று கேட்கிறார். மேலும், சரவணன் ஆள் சரியில்ல அப்புடி எல்லாம் பேசுறாங்க இதெல்லாம் உண்மையா என்று கேட்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் எதுவுமே கதைக்காமல் அங்கிருந்து கிளம்புறார். 


பின் கோவிலில பாண்டியன் கவலையா இருக்கிறதைப் பார்த்த முத்துவேல் சந்தோசப்படுறார். அதைத் தொடர்ந்து முத்துவேல் பாண்டியனைப் பார்த்து என்ன மகனோட வாழ்க்கை இப்புடி ஆகிட்டு என்று சாமிகிட்ட புலம்ப வந்திருக்கியா என்று கேட்கிறார். மேலும், அந்தக் குடும்பம் நிறைய கடனை வச்சிருக்காங்க அதை கூட ஒழுங்கா விசாரிக்காமலா கல்யாணம் பண்ணி வைச்ச என்று கேட்கிறார். 

அதற்கும் பாண்டியன் எதுவுமே கதைக்காமல் அமைதியா இருக்கிறார். மறுபக்கம் காந்திமதி சரவணனை  நினைத்து கவலையாக இருக்கிறார். அதனை அடுத்து பழனி அக்கா வீட்ட என்ன நடந்தது என்று கேட்கிறார். பின் வடிவு நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட பழனி அக்கா வீட்ட போகப்போறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.


பாண்டியன் வீட்ட பழனியைப் பார்த்த குழலி நீங்க எதுக்காக இங்க வந்தனீங்க என்று கேட்கிறார். மேலும், குழலி பழனியை இந்த விஷயத்தில தலையிட வேண்டாம் என்கிறார். அதைக் கேட்ட பழனி எதுவுமே கதைக்காமல் அங்கிருந்து போறார். பின் பழனி கோமதி வீட்ட போனதைப் பார்த்த சக்திவேல் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement