• Apr 17 2026

ரோகிணிக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய முத்து.! பரபரப்பான புதிய ப்ரோமோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சிறகடிக்க ஆசை சீரியல்  தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில்  ரோகிணியின்  நாடகங்கள் அத்தனையும்  அம்பலமாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்த திருப்பங்கள் எதிர்பார்க்காத வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. 

மனோஜ் தனக்கு டிவோஸ் வேண்டும் என்ற உறுதியாக இருந்தாலும், ரோகிணியின்  காதல் வலையில் சிக்கி  விடுகின்றார்.  எனவே மனோஜ் மெது மெதுவாக  ரோகிணியின் பக்கம் சாய்ந்து விடுவாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு காணப்படுகிறது. 

அதே நேரத்தில்  ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லுமாறு விஜயா பார்வதியிடமும் சிந்தாமணியிடமும் கேட்கின்றார். ஆனால் அவர்கள் தங்களால் முடியாது என மறுத்து விடுகின்றார்கள். 


இந்த நிலையில் தற்போது வெளியான சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோவில்,  ரோகிணிக்கு எதிராக ஆதாரங்களை முத்து திரட்டுகின்றார். அதன்படி வித்தியாவும்  மலேசியா மாமாவும் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லுகின்றனர். 

எனவே  இதனை ரோகிணி எப்படி கையாள போகின்றார்? எப்படி அதிலிருந்து தப்ப போகின்றார்? மனோஜ் அவருக்கு ஆதரவாக இருப்பாரா? இல்லை  அவர்களுக்கு டிவோர்ஸ் கிடைக்குமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement